கனவுக் கதாநாயகன்
அன்னத்தை போல மென்கரம் ஒன்று
கன்னத்தை தட்டி எழுப்பிய தன்று!
முகத்தில் புன்னகை சூடினேன்,
அகத்தில் இன்பத்தை நாடினேன்!
இருளோடு என்னை கவர்ந்திழுத்தார்,
அருளோடு உடன்வர எனையழைத்தார்.
பின்புறம் இரண்டு சிறகுகள் பார்த்தேன்
என்னிடமில்லா அறிவையும் கண்டேன்.
கோர்த்தார் கரமென் இடுப்பினிலே
பறந்தார் பலபல இடங்களிலே!
சேர்த்தே அணைத்தார் முகத்தோடு
பார்த்திட நிறைந்தார் அகத்தோடு!
அப்புறம் நடந்தது ரகசியம் தான்,
எப்புறம் திரும்பினும் அதிசயம் தான்!
மனைநிலம் ஆறுகள் கடந்திட்டார்.
கனவினில் கால்களின் தடமிட்டார்!
சொப்பனம் முடிந்து கண்விழித்தேன்,
இக்கதை மகிழ்வுடன் பகிர்ந்திட்டேன்.
தாலிக்குரிய தங்கமகன் - என
கேலிகள் பலரும் செய்தனரே!
தேவனாய் நினைக்கவும் முடியவில்லை!
தேடி அலைந்திடவும் சக்தியில்லை!!
சிறுபொழுதே என்னிடம் பங்கிட்டார்!
நினைவலையில் என்றென்றும் தங்கிட்டார்!!
-சுமஜ்லா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக