1000 மற்றும் 500 ரூபாய் செல்லாது என்று மோடி அறிவித்ததிலிருந்து நாடே மோடி அரசிற்கு எதிராக திரண்டு இருக்கிறது. மோடி மீதும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் மீது மக்கள் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறன்றனர். இதை திசை திருப்புவதற்காக மோடி ஆதரவாளர்கள் கடுமையான முயற்சிகளை செய்து வருகின்றனர்.
வடக்கில் உள்ள இந்தியர்களின் மனநிலையை திசை மாற்ற ஜாகிர் நாயக் பிரச்சினையை மீண்டும் கையில் எடுத்து அதை பெரிதாக ஊத முயற்சித்தனர். ஆனால் மக்களின் கவனம் பணப்பிரச்சினையிலேயே செலுத்தப்பட்டது.
அதுபோல் தமிழகத்தில் மூன்று முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதும் அவர்கள் அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று ஊடகங்கள் ஆதாரமே இன்றி கதறுவதும் தென்னிந்தியாவில் உள்ளவர்களை பணப்பிரச்சினையிலிருந்து திசை திருப்பும் முயற்சியாகவே அறிய முடிகிறது.
அதிலும் தந்தி டிவி பாண்டே போன்றவர்கள் தங்களின் காட்சி ஊடகங்களை தாண்டி தனது முகநூல் பக்கத்தில் கூட இந்த கைது நடவடிக்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் அவர்களின் திசை திருப்பும் நாடகம் உள்ளங்கை நெல்லிக்காயாக தெரிகிறது.
தனது மோட்டர் பைக்கை தானே கொளுத்திக் கொண்டு பிறர் மீது பழி போட்டவன், தனது அலுவலகத்திற்குள் தானே குண்டு வீசி பொது அமைதியை கெடுத்தவன், தன் கட்சியை சார்ந்தவனை தானே கொலை செய்து விட்டு அதை பிற சமுதாயத்தினர் மீது போட்டு கலவர தூபத்ததை தூவியவன், பிரேத ஊர்வலம் என்கிற பெயரில் கடைகளை உடைத்து மொபைல் போன்களையும், பிரியாணி அண்டாக்களையும் திருடியவன் என்று அனைத்து விதமான போக்கிரித்தனத்திற்கும் பெயர் பெற்ற பயங்கரவாதிகள் தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட போது பாண்டேக்கள் இப்படி தனது முகநூல் பக்கங்களில் ஒப்பாரி வைத்ததுண்டா?
இதுபோன்ற போக்கிரித்தனமானவர்களை பார்த்து கவலையாக இருக்கிறது என்றும் இவர்கள் ஏன் இப்படி திசை மாறிப்போனார்கள் என்றும் தனது முகநூல் பக்கத்தில் புலம்ப முடிந்ததா?
முடியவில்லையே ஏன்? ஏனெனில் இவர்களின் நோக்கம் ஒரு சமுதாயத்தை குற்றப்படுத்தியே தன்னை வளர்த்து கொள்ள வேண்டும் என்கிற ஒரு தந்திரம் தானே? மோடியின் தீவிரவாதத்தால் மக்கள் வங்கிகளின் வரிசையில் நின்று செத்து மடிவதையும், இன்னபிற வழிகளில் அவர்கள் துன்புறுவதையும் திசை திருப்பும் நாடகம் தானே?
நாம் எத்தனை முறை ஊடக பயங்கரவாதத்தை அடையாளப்படுத்தினாலும், நாங்கள் அப்படியல்ல, நாங்கள் உங்களுடனயே பயணிக்கிறோம் என்று சொல்லி நம் கழுத்தறுப்பதில் பாண்டேக்களும், சில முகநூல் பிரபலங்களும் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார்கள் என்பது மிகுந்த வருத்தப்படச் செய்கிறது.
அன்பின் அறிவழகன்



